Thursday, 21 June 2012

மனசு......!

ஆழ்மனதில்
உன் நினைவின் கிள்ளல்

நீ பேசிய
ஒவ்வொரு வார்த்தையும்
என் எதிர்காலம் காட்டும்
கண்ணாடியாய்...........

என் இருள்வெளியெங்கும்
வெளிச்சங்களை
விசிறியடித்தவள் நீ

என் கனாசாலையில்
பூக்கள் குலுங்க
சிரிப்பவள் நீ

என் நினைவோடு
எப்போதும்
இருப்பதால்  நீயும் கவிதையே

தூரமாய்தான் இருக்கிறாய்
உனக்கும் எனக்கும்
இடைவெளி அதிகம்
அருகருகே மனசு...........!
























4 comments:

  1. அருகருகே மனசு அஹா அருமை .

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி ...... அருகே வந்து அருமை சொன்னமைக்கு..

      Delete
  2. //என் நினைவோடு
    எப்போதும்
    இருப்பதால் நீயும் கவிதையே// மிகவும் அருமை..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா வாங்க ...மகிழ்ச்சி நன்றி.....!

      Delete