Friday, 22 June 2012

காதல்........!..

நிலா  வெளிச்சம்
நெடுந்தூரப் பயணம்
நீயும் நானும்
விரல்பிடித்த மலர்களாய்
கவிதை பேசிக்கொண்டே

நீ சிரிக்கிறாய்
நிலா எட்டிப்பார்க்கிறது
நீ வெட்கப்படுகிறாய்
மேகம் திரைப்போடுகிறது

அரவம் கழுவிய
அழகுப்பொழுதிலும்
தனிமையின்  தாகப்பொழுதிலும்
நீ நீயாகவும்  நான் நானாகவும்
காதல்  கற்புடையது
என்று உணர்வார்கள்
நம் காதலால்







1 comment:

  1. காதலின் விரல் பிடித்து கற்பு நடக்கிறது அழகு .

    ReplyDelete