சூரிய விதையை விதைப்பான் –பூமி
சூழும் இருளை அறுப்பான்---அவன்
சீரிய வாழ்வினில் வறுமை நசுக்க
தினம்தினம் புழுவாய் தவிப்பான்
கூரிய தமிழ்சொல் எடுப்பான் –தீயில்
ஊறிய கவியை கொடுப்பான் –அவன்
பாடியப் பாட்டினில் பசியிரு க்காது
வாடிய வயிறாய் படுப்பான்
எரிபுயல் போலவே நடப்பான் -----உலகைப்
புரட்டிடும் கவியைப் படைப்பான் ---அவன்
ஏளனப் புழுதியை என்றும் ஏற்று
எளிமையின் நிழலாய் கிடப்பான்
இவந்தான் பூமியின் வேந்தன் –தமிழ்
கவியால் ஈர்க்கும் காந்தன் –இவன்
வாழும் போது மதிப்புக ளில்லை
மண்ணில் பாவ மாந்தன்.....!
No comments:
Post a Comment